சித்தாமூரில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

62பார்த்தது
சித்தாமூர் அருகே பள்ளி மாணவர்களுடன் காவலர்கள் இணைந்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தினர்

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூரில் உள்ள தனியார் பள்ளியில்

செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரினீத் உத்தரவின் படி மாணவர்களுடன் காவலர்கள் இணைந்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தினர்

போதை தவிர் நல்ல கல்வி என்னும் பாதையால் நிமிர்

குடிக்காதே நற்குடியை கெடுக்காதே

போதையை ஒழிப்போம் நல்ல பாதையை வகுப்போம்

புகையிலை நமக்கு பகையிலை

எனும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு பொலம்பாக்கத்தின் முக்கிய வீதிகள் வழியாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்கள் பெண்கள் என சுமார் 700க்கும் மேற்பட்டோர் பேரணியாக நடந்து சென்றனர்

மேலும் சைபர் கிரைம் குற்றங்களிலிருந்து எப்படி தங்களை தற்காத்துக் கொள்வது என்றும் அதற்கு தடுப்பு நடவடிக்கை என்னென்ன என்பது குறித்தும் காவல் உதவி ஆய்வாளர் அமுதா பள்ளி மாணவர்களுக்கு விவரித்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி