தொகுதி மறு வரையறை விவகாரம் தொடர்பாக நடைபெறவுள்ள அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அமைச்சர்கள் நேரில் சென்று அழைப்பு விடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற மார்ச் 5ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அமைச்சர்கள் இன்று முதல் நேரில் சென்று கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.