காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கி வரும் சாம்சங் தொழிற்சாலையில், தொழிலாளர்களுக்கு நெருக்கடி அளிப்பதாக கூறி, தொழிற்சாலை நிர்வாக இயக்குனரை சந்திக்க அனுமதி கேட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் மூவரை, 'சஸ்பெண்ட்' செய்து நிர்வாகம் கடிதம் அளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், தொழிற்சாலையின் உள்ளே, நேற்று முன்தினம் வரை 16வது நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். நேற்று முன்தினம் தொழிற்சாலைக்கு உள்ளே சென்று, உற்பத்தியை தடுக்கும் நோக்கில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் மற்றும் வருவாய் துறையினர் அவர்களிடம் பேச்சு நடத்தினர். இதையடுத்து, தொழிற்சாலைக்கு உள்ளே இருந்து வெளியேறி, வழக்கமான இடத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மேலும் 13 தொழிலாளர்களை, 'சஸ்பெண்ட்' செய்ததாக சாம்சங் நிர்வாகம் கடிதம் அளித்து, தொழிற்சாலையில் இருந்து 13 பேரை வெளியேற கூறியது. இந்த கடிதத்தை வாங்க மறுத்து, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் அனைவரும் தொழிற்சாலை வளாகத்தில் இருந்து வெளியேறினர். சாம்சங் நிர்வாகத்தினர் இந்த சட்டவிரோத போக்கை கண்டித்து, நேற்று ஓரகடம், வல்லம் வடகால், இருங்காட்டுக்கோட்டை பகுதிகளில், சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் போராட்டத்தில்