கல்பாக்கத்தில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

77பார்த்தது
தமிழகம் முழுவதும் அதிமுக நிறுவனரும் முன்னாள் முதல்வருமான புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் 108வது பிறந்த நாளில் அதிமுகவினர் அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் நகரில் உள்ள எம்ஜிஆரின் திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ் ஆறுமுகம், மாவட்ட அவைத் தலைவர் எம் தனபால் ஆகியோர் கலந்து கொண்டு கிழக்கு கடற்கரை சாலை அருகே அதிமுக கொடியை ஏற்றி வைத்து அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

அதனைத் தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு வேட்டி சேலை உள்ளிட்ட பொருட்களை வழங்கி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் புதுப்பட்டினம் ஊராட்சி மன்றத் தலைவர் காயத்ரி தனபால், ஒன்றிய செயலாளர் விஜயரங்கன், மாவட்டத் துணை செயலாளர் யஷ்வந்த்ராவ், மாவட்ட மீனவரணி செயலாளர் கவிஞர் கலியபெருமாள், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆனூர் பக்தவச்சலம், லத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் வேலு உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள், மகளிரணி பொறுப்பாளர்கள் என பலர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி