செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அடுத்த மேட்டுகொளத்தூர் கிராமத்தில் பழமையான முத்து மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவை ஒட்டி கடந்த 31 தேதி அன்று லஷ்மி பூஜை, நவகிரக பூஜை, கோ பூஜை, கணபதி பூஜை, பூரணாதி உள்ளிட்ட பூஜைகளுடன் முதல் கால ஏகாசாலை பூஜை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து இன்று நான்காம் கால யாகசாலை பூஜை செய்யப்பட்டு யாகசாலையில் பல்வேறு பூஜைகள் செய்யப்பட்ட புனித நீரை சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க விமான கோபுரத்திற்கு புனித நீர் எடுத்துச் செல்லப்பட்டு புனித நீரினை சிவாச்சாரியார்கள் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடத்தி வைத்தனர்.
இந்த கும்பாபிஷேக விழாவில் ஏராளமானோர் பக்தி பரவசத்துடன் சாமி ஆடினர். இந்த கும்பாபிஷேக விழாவில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.