சென்னையில் இருந்து 3 மணி நேரம் தாமதமாக புறப்பட்ட விமானங்கள்

85பார்த்தது
சென்னை விமான நிலையத்தில் டெல்லி, மும்பை செல்ல வேண்டிய 2 விமானங்கள், திடீரென 3 மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டுச் செல்லும் என்று அறிவிப்பு. நிர்வாக காரணங்களால், இந்த விமானங்கள் தாமதமாக இயக்கப்படுவதாக, ஏர் இந்தியா தரப்பில் தகவல். சென்னையில் இருந்து இன்று காலை 8.05 மணிக்கு, டெல்லிக்குப் புறப்பட்டுச் செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம், சுமார் 3 மணி நேரம் தாமதமாக, காலை 11 மணிக்கு, புறப்பட்டுச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இன்று காலை 11.40 மணிக்கு சென்னையில் இருந்து மும்பை செல்ல வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானம், இன்று சுமார் 3 மணி நேரம் தாமதமாக, பிற்பகல் 2:30 மணிக்கு, சென்னையில் இருந்து மும்பைக்குப் புறப்பட்டுச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த 2 ஏர் இந்தியா விமானங்கள், தாமதத்திற்கு நிர்வாக காரணங்களால் விமானங்கள் தாமதமாக இயக்கப்படுவதாகவும், பயணிகளுக்கு முன்னதாகவே தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டதாகவும் ஏர் இந்தியா தரப்பில் அறிவிக்கின்றனர். ஆனால் இந்த விமானங்களை இயக்குவதற்கு விமானிகள் இல்லாத காரணத்தால், விமானங்கள் தாமதமாக இயக்கப்படுவதாக கூறப்படுகிறது. டெல்லி, மும்பை செல்ல வேண்டிய 2 ஏர் இந்தியா விமானங்கள், இன்று 3 மணி நேரம் தாமதமாக சென்னையில் இருந்துப் புறப்பட்டுச் செல்ல இருப்பதால், பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி