செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அம்மா பேரவை சார்பாக மதுராந்தகம் நகர் பகுதியில் உள்ள அனைத்து வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் சாதனை மற்றும் நான்கு ஆண்டு திமுக ஆட்சியின் அவலநிலைகளை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆனூர் பத்வாசலம் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ். ஆறுமுகம், மதுராந்தகம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் ஆகியோர் கலந்து கொண்டு மதுராந்தகம் நகர் பகுதியில் உள்ள அனைத்து வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களை முதலமைச்சராக அரியணையை ஏற்றுவோம் என உறுதிமொழி ஏற்றனர். இந்த நிகழ்ச்சியில் மதுராந்தகம் நகர அம்மா பேரவை செயலாளர் வழக்கறிஞர் எம்பி சீனிவாசன், மதுராந்தகம் நகர கழக செயலாளர் பூக்கடை சரவணன் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கிளை கழக நிர்வாகிகள் அம்மா பேரவை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.