செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு பச்சையம்மன் கோவில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஊட்டியில் இருந்து அதிகாலை சென்னை நோக்கி வந்த அரசு சொகுசு பேருந்து சாலையோரம் நிறுத்தப்பட்டபோது சென்னை ராயபுரம் பகுதியைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சபரிமலை சென்று சாமி தரிசனம் முடித்து விட்டு இன்று வீடு திரும்பிய நிலையில் முன்னால் சென்ற அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பேருந்தின் முன் பகுதி சேதமடைந்த நிலையில் இதில் பயணம் செய்த ஐயப்ப பக்தர்கள் 10 பேர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து செங்கல்பட்டு தாலுகா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.