செங்கல்பட்டு: தொழுப்பேட்டில் அஞ்சலக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

83பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அடுத்த தொழுப்பேடு பகுதியை சேர்ந்தவர் ரங்கராஜன் லோகம்மாள் இவருடைய மகன் 12 வயது ஹரிஷ் என்பவருக்கு பாஸ்போர்ட் தபால் மூலம் வந்துள்ளது. இதை அடுத்து இன்று தொழுப்பேடு துணை அஞ்சலக அலுவலகத்தில் சென்று எனது மகன் ஹரிஷ் அவர்களுடைய பாஸ்போர்ட் தபால் மூலம் வந்துள்ளதாக ரங்கராஜன் கேட்டுள்ளார்.

 அப்போது அஞ்சலக அலுவலர் நீங்கள் இவருடைய உறவினரா என கேட்டு ரங்கராஜனிடம் தகாத வார்த்தைகளால் தொழுப்பேடு துணை அஞ்சலக அலுவலர் பூபாலன் அவதூறான வார்த்தைகளால் பேசியுள்ளார். இதனை ரங்கராஜன் ஓட்டுநர் கோகுல் வீடியோ எடுக்க முயன்றபோது அஞ்சலக அலுவலர் பூபாலன் கோகுளிடம் இருந்த செல்போனை பிடுங்கி அவரைத் தாக்கி தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 இதையடுத்து ரங்கராஜன் அச்சரப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட அஞ்சல் அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது அங்கு வந்த மாவட்ட அஞ்சல் அலுவலரிடம் தொழுப்பேடு துணை அஞ்சலக அலுவலர் பூபாலன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனுவை அளித்தனர். இந்த மனு மீது விசாரணை நடைபெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி