திருப்பரங்குன்றம் சரித்திரம் சேகர்பாபுவிற்கு தெரியுமா. 1926ம் ஆண்டு இதே பிரச்சனை வந்த போது அங்கிருந்த சப்-ஜட்ஜ் தீர்ப்பு தருகிறார். திருப்பரங்குன்றம் கோவில் எந்த சந்தேகமின்றி தேவஸ்தானத்திற்கு சொந்தமானது. அரசு நிலங்கள் அரசுக்கு சொந்தமானது. 1926ம் ஆண்டு தீர்ப்பு தெளிவாக இருக்கிறது. அது முழுக்க கோவிலுக்கு சொந்தமானது. அப்போது அப்பீலுக்கு சென்ற போது 2 தரப்பினரும் சமாதானமாக செல்ல அறிவுறுத்தப்பட்டது. 1931ல் பிரிவி கவுன்சில் சப்-ஜட்ஜ் தீர்ப்பை ஏற்கப்படுவதாக கூறியுள்ளது.
ஆங்கிலேயர் காலத்தில் கோவில் பாறைகளை உடைக்கும் போது தடுக்கின்றனர். ஆங்கிலேயர்கள் இந்து மக்களுக்காக தற்காத்த ஒரு கோவிலை திராவிட கும்பல் திமுக அதை கொடுக்க தயாராக இருக்கிறது. சேகர்பாபு 1931ல் தரப்பட்ட தீர்ப்பை படிக்க வேண்டும். புதிதாக இன்னொரு மதத்தை சேர்ந்தவர்கள் பிரச்சனையை ஆரம்பிக்கின்றனர். ஆடுகளை எடுத்து சென்று சாப்பிடுகின்றனர். ஒரு எம்.பி மீது நடவடிக்கை எடுக்க துணிவு இல்லை. சேகர்பாபு வீர வசனம் பேசுகிறார். இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் என அமைச்சர் ரகுபதி சொல்கிறார். அவர் அடக்குமுறையை பார்த்தோம். பெண்கள், குழந்தைகள் ஆகியோரிடம் தவறு செய்பவர்களை பிடிக்க வேண்டிய காவல்துறையை பா.ஜ.க வை சேர்ந்த 350 இடங்களில் நள்ளிரவில் வீட்டில் கைது செய்து வைத்துள்ளனர். அந்தந்த ஊரில் உள்ள பா.ஜ.க தலைவரை வளர்த்து கொண்டு இருக்கிறீர்கள்.