படூர் ஊராட்சியில் பொங்கல் விழாவில் அசத்திய பெண்கள்

61பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த படூர் ஊராட்சியில் மாற்றத்தை நோக்கி அறக்கட்டளை மற்றும் படூர் ஊராட்சி இணைந்து சமத்துவ பொங்கல் விழா ஊராட்சி மன்ற தலைவர் தாராசுதாகர் தலைமையில் கொண்டாடப்பட்டது. ஊராட்சியில் கொண்டாடப்படும் விழாவிற்கு அனைத்து தரப்பு மக்களும் கலந்துகொண்டு சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர்.

தொடர்ந்து சிறுவர்களுக்கான விளையாட்டுகள் நடைபெற்ற நிலையில் பெண்களின் வீரத்தையும் தைரியத்தையும் வெளிப்படுத்தும் வகையில் போட்டிகள் நடைபெற்றன. அதில் குறிப்பாக 75 கிலோ அரிசி மூட்டையை தூக்கும் போட்டி நடைபெற்றது. இதில் ஆண்களே தூக்குவதற்கு முன் வராத நிலையில் பெண்கள் அசால்டாக தூக்கி 60 அடி தூரம் நடந்து சென்று அசத்தினர். அதோடு விட்டுவிடாமல் தொடர்ந்து 50 கிலோ எடை கொண்ட இளவட்டக் கல்லை அசால்டாக தூக்கி அசத்தினர். இதனை ஆண்களே வியந்து பார்த்தனர். 

தொடர்ந்து அரசு பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் சிலம்பம் போட்டி, நடன நிகழ்ச்சிகள், பொதுமக்களை ஆச்சரியமூட்டும் மேஜிக் ஷோ, உறியடித்தல், கயிறு இழுத்தல், கோலம் போட்டி, இசை நாற்காலி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் 75 கிலோ அரிசி மூட்டையை தூக்கி வெற்றி பெற்ற நரிக்குறவர் பெண்ணுக்கு அரிசி மூட்டை பரிசாக வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி