மதுராந்தகம் வர்த்தகர் சங்க புதிய பொறுப்பாளர் பதவி ஏற்பு விழா

77பார்த்தது
சென்னையில் உள்ள வெள்ளையன் வீடு உள்ள தெருவிற்கு வெள்ளையன் தெரு என பெயர் சூட்ட வேண்டும்
மே 5 வணிகர் தினமாக கொண்டாடுவதால் இதை அரசு அங்கீகரித்து அரசு விடுமுறை நாளாக அறிவிக்க தமிழ்நாடு அரசுக்கு வணிகர் சங்கம் சார்பில் மாநிலத் தலைவர் அரசுக்கு வேண்டுகோள்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் மதுராந்தகம் வர்த்தகர் சங்க புதிய பொறுப்பாளர்கள் பதவி ஏற்பு விழா
மாநில செயற்குழு கூட்டம் மற்றும் வணிகர் தின விழா மாநாடு தொடர்பாக நடத்தப்பட்ட முப்பெரும் விழா நிகழ்ச்சி மதுராந்தகத்தில் மதுராந்தகம் வர்த்தக சங்க தலைவர் பானு சேகர் தலைமையில் நடைபெற்றது. 

இவ் விழாவிற்கு தமிழ்நாடு வணிகர் சங்க மாநிலத் தலைவர் சௌந்தர்ராஜன் மாநில பொது செயலாளர் மெஸ்மர் காந்தன் வெள்ளையன் மாநில செயலாளர் பீர்முகமது ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர் விழாவின் இறுதியில் தமிழ்நாடு வணிகர் பேரவையின் முன்னாள் மாநில தலைவரும் நிறுவருமான வெள்ளையன் அவர்கள் வசிக்கும் சென்னையில் உள்ள அவரது இல்ல தெருவிற்கு நெல் வயல் சாலை என உள்ளதை பெயர் மாற்றி வெள்ளையன் சாலை என பெயர் மாற்றமும் அது போல் வணிகர் தினமான மே 5 அரசு அங்கீகரித்து இந்த நாளை பொது விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்க மாநிலத் தலைவர் தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு கோரிக்கையாக வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி