செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த காயார் பகுதியில் உள்ள கடைகளில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, காயார் போலீசாருக்கு தகவல் வந்தது. இதன்படி, காயார் பகுதி கடைகளில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த பெருமாள், 44, என்பவருக்குச் சொந்தமான கடையில், 2 கிலோ குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன. இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த போலீசார், பெருமாளை கைது செய்து விசாரிக்கின்றனர்.