
கோவிலை அபகரிக்க முயற்சி.. நடிகர் வடிவேலு மீது புகார்
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடியில், திருவேட்டை உடைய அய்யனார் கோவில் இருக்கிறது. இது நடிகர் வடிவேலுவின் குலதெய்வம் கோவில் என கூறப்படுகிறது. இந்நிலையில் வடிவேலு, ஒருவரை தூண்டிவிட்டு கோவில் நிர்வாகத்தை கைப்பற்றி அதன்மூலம் கோவிலை அபகரிக்க முயற்சிப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஊர் மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இன்று (பிப்.09) காலை கோவில் முன்பு திரண்ட பொதுமக்கள் வடிவேலுவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.