
திண்டுக்கல்: கேட்பாரற்று கிடந்த கஞ்சா, புகையிலை பொருட்கள் பறிமுதல்
புருலியா - திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயிலில் திண்டுக்கல் ரயில்வே காவல் நிலைய போலீசார் மற்றும் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவினருடன் இணைந்து சோதனை நடத்தியபோது பொதுப்பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பொட்டலங்களை எடுத்து பார்த்தபோது அதில் 4 கிலோ 400 கிராம் கஞ்சா மற்றும் புகையிலை வஸ்துக்கள் இருந்தது தெரிய வந்தது. அதனை கைப்பற்றி ரயில்வே காவல் நிலையம் கொண்டுவந்து விசாரணை நடத்தி திண்டுக்கல் போதைப்பொருள் நுண்ணறிவு போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது.