பாஜகவின் தேர்தல் அறுவடைக்காக தமிழ்நாட்டின் ஒற்றுமையை சீர்குலைத்திட திட்டமிட்டு சதிகளை அரங்கேற்று வருகின்றன என்று மதச்சார்பற்ற கட்சிகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளது. "திருப்பரங்குன்றத்தை மையப்படுத்தி தற்போது அடுத்தகட்ட மதவெறித் திட்டத்தை பாஜக, சங்பரிவார் அமைப்புகள் அரங்கேற்றியுள்ளன. மதச்சார்பின்மை மற்றும் மக்கள் ஒற்றுமை காப்போம்" என திமுக, காங், திக, மதிமுக, விசிக, மநீம, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ஐயூஎம்எல், மமக, கொமதேக, தவாக உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.