கருப்பு உளுந்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது செரிமான உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு தருகிறது. சரும சம்பந்தமான பிரச்னைகளைப் போக்க கருப்பு உளுந்து கொண்டு செய்யப்பட்ட உணவுகள் அதிகம் ஆயுர்வேதத்தில் பரிந்துரைக்கப்படுகிறது. இதயத்திற்கு செல்லும் இரத்த நாளங்கள் மற்றும் இதயத்தின் ஆரோக்கியத்தை உறுதி செய்து அது தொடர்பான நோய்கள் ஏற்படாமல் காக்கிறது.