
பழனி
திண்டுக்கல்: மாற்றுத்திறனாளிகளுக்கு வாகனம் வழங்கல்
திண்டுக்கல் மாவட்டம், சிவகிரிபட்டி தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா வாகனம் வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கலந்துகொண்டு, பயனாளர்களுக்கு வாகனங்களை வழங்கினார். மாற்றுத்திறனாளிகள் வாகனம் தேவைப்படுவோர் விண்ணப்பித்தால் அனைவருக்கும் வாகனம் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.