

வேடசந்தூர்: தண்ணீர் டேங்க் ஆபரேட்டர் தூக்கு மாட்டி தற்கொலை
திண்டுக்கல் மாவட்டம் கோடாங்கி பட்டியைச் சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 43) குடிநீர் டேங்க் ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். மனைவி கௌரி (38) ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பிரசன்னா என்ற மகனும் ஏழாம் வகுப்பு படிக்கும் ஹரிவிமல் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த திங்கள் கிழமை மகன்கள் இருவருக்கும் காதணி விழா நடைபெற்றது. காதணி விழா நடைபெற்ற மன உளைச்சலில் இருந்த வேல்முருகன் வீட்டில் அனைவரும் தூங்கிய பிறகு தனது மற்றொரு வீட்டில் உள்ள விட்டத்தில் சேலையால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். காலையில் எழுந்து மனைவி பார்த்து அதிர்ச்சி அடைந்து உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த வேடசந்தூர் போலீசார் உடலை கைப்பற்றி வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.