ஆத்தூர் - Athoor

மின்கசிவால் தீ விபத்து

திண்டுக்கல் மேற்கு மறியநாதபுரத்தில் மின் கசிவால் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து நாசம். திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம் தேவ சகாய நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜான்சன் வயது 52. இவர் தனது தாய் நசரத் மேரி மற்றும் மகள் ஜெர்லி ஆகியோருடன் வசித்து வருகின்றார். ஜெர்லி அப்பகுதியில் உள்ள ஜவுளிக்கிடையில் வேலை பார்த்து வருகிறார். இன்று அனைவரும் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டனர். சனிக்கிழமை மாலை 4. 30 மணி அளவில் அவர்கள் வீட்டில் இருந்து புகை கிளம்பியதால் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் ஜான்சனுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் இது குறித்து திண்டுக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் உதவி மாவட்ட அலுவலர் சிவக்குமார் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர். இருந்த போதும் வீட்டின் மேற்கூரை டிவி பிரிட்ஜ் கட்டில் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது. இது குறித்து நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தியதில் மின் கசிவால் விபத்து ஏற்பட்டது. மேலும் மூன்று பேரும் வீட்டில் இல்லாததாலும் சிலிண்டர் அணைக்கப்பட்டு இருந்ததாலும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

வீடியோஸ்


భద్రాద్రి కొత్తగూడెం జిల్లా