வேலூர்: இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சின்ன காஞ்சிபுரத்தைச் சேர்ந்த, 30 வயது இளம்பெண் சீட்டு பணத்தைப் பெற வேலூர் வந்துள்ளார். அப்போது, இளம்பெண்ணுக்கு குளிர்பானத்தில் விடுதியில் கலந்து கொடுத்து அல்தாப் தாசின், மகேஷ், ராஜ்குமார் ஆகியோர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து வீடியோவும் எடுத்துள்ளனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.