பாலக்கோடு: விவசாயி தற்கொலை காவல்துறையினர் விசாரணை
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நல்லான் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் சின்னதம்பி விவசாயி. இவர் இன்று அக்டோபர் 15 காலை அதே பகுதியில் விவசாய நிலத்தில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த பாலக்கோடு காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சின்னதம்பியின் உடலை மீட்டு பிரேதே பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.