கே. நடுஅள்ளி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்

58பார்த்தது
கே. நடுஅள்ளி ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு
K. N. சவுளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஊராட்சி மன்ற தலைவர் T. அப்பாமணி, தலைமையில் கிராமசபை கூட்டம் இன்று நடைபெற்றது. கே. நடுஅள்ளி ஊராட்சியை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள். வாக்காளர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், கிராம நிர்வாக அலுவலர், கிராம செவிலியர்கள், நியாய விலைக்கடை பணியாளர்கள், கூட்டுறவுத்துறை பணியாளர், தூய்மை காவலர்கள் மற்றும் அனைத்துத்துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

K. S. R. சத்யா சேட்டு
மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர், N. லதா கோவிந்தராஜ் துணைத் தலைவர், ஊராட்சி செயலர் சக்கரவேல் அடிப்படை வசதிகள், காவிரி உபநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். காவிரியில் இருந்து உபரி நீர் அனைத்து ஏரிகளுக்கு செலுத்தினால் விவசாயம் செழிப்பாக இருக்கும் எனவே திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் தீர்மானங்களை மக்கள் முன் வைத்தனர். மேலும் மது மற்றும் போதை பொருட்கள் ஒழிப்பு உறுதிமொழி அனைவரும் எடுத்துக் கொண்டனர் தங்கள் ஊராட்சியில் பகுதிகளில் போதை பொருட்கள் விற்பனை செய்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று பொதுமக்களிடையே ஊராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி