தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காலையிலிருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதியம் 3 மணிக்கு மேல் தர்மபுரி, பாலக்கோடு, பென்னாகரம், காரிமங்கலம் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள் தொடர்ந்து வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.