தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை நாட்களில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது இந்த நிலையில் நேற்று அக்டோபர் 2 புதன்கிழமை தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது மாவட்டத்தின் 33 காவல் நிலையங்களில் இருந்து புகார் மனுதாரர்கள் நேரில் வரவழைக்கப்பட்டன.
இதில் சொத்து தகராறு, நிலத்த தகராறு, அடிதடி, பொது வழி பிரச்சினை, குடும்பத் தகராறு, ஊர் தகராறு, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 67 புகார் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 3 மனுக்கள் மீது விசாரணை முடித்து வைக்கப்பட்டது. 14 மனுக்கள் மேல் விசாரணைக்காக காவல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டது. இந்த முகாமில் உதவி காவல் கண்காணிப்பாளர்கள் பாலசுப்ரமணியன், ஸ்ரீதரன், மற்றும் காவல் ஆய்வாளர்கள் உதவி காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.