பாலக்கோடு: உலக விண்வெளி வாரம் கொண்டாட்டம்

61பார்த்தது
உலக விண்வெளி வாரம் அக்டோபர் 07 முதல் 09 வரை நடைபெறுகிறது. இதில் தமிழகத்தில் திண்டுக்கல் & தருமபுரி ஆகிய 2 இடங்களில் இந்த விண்வெளி வாரம் கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து தருமபுரி பச்சமுத்து மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் உலக விண்வெளி வாரம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விண்வெளி கண்காட்சியினை சேலம் ஸ்டீல் பிளானட் இயக்குனர் விகே பாண்டே இன்று காலை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஸ்ரீஹரி கோட்டா இஸ்ரோ இணை இயக்குனர் சையத் அகமத் கலந்து கொண்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் உரையாடினார். விழிப்புணர்வை ஏற்படுத்து வகையில் உலக விண்வெளி வாரம் கொண்டாடப்படுகிறது.

இந்த கண்காட்சியில் அரசு பள்ளிகள் மற்றும் தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் தயாரிபாபில் மாதிரி செயற்கைக் கோள்கள் மற்றும் ராக்கெட்கள் வைக்கப் பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர். மேலும் மாணவ மாணவர்களின் கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வைத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி