

தர்மபுரி: சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்த தர்மபுரி எம் எல் ஏ
இன்று மார்ச் 20 நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்பி வெங்கடேஸ்வரன் தர்மபுரி நகராட்சியுடன் இலக்கியம்பட்டி, நல்லமபள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏ. ஜெட்டி அள்ளி, தடங்கம் உள்ளிட்ட கிராம ஊராட்சிகளை தர்மபுரி நகராட்சியுடன் இணைக்கப்பட்டால் விவசாய நிலங்கள் விளைநிலங்களாக மாறும் என்பதாலும், இங்குள்ள 100 நாள் வேலை திட்ட பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் அரசு பொதுமக்களின், கருத்துக்களை கேட்டு தமிழக அரசு முடிவு செய்ய வேண்டும் என நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே நேருவிடம் கோரிக்கை வைத்தார்.