பாலக்கோடு: உழவர் சந்தைகளில் 61 டன் காய்கறிகள் விற்பனை

57பார்த்தது
தர்மபுரி மாவட்டம் முழுவதும் நேற்று அக்டோபர் 4 பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் காவிரி உபரி நீர் திட்டத்தை வலியுறுத்தி அரை நாள் கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது இதனால் பொதுமக்கள் காய்கறிகள் வாங்க நேற்று காலை சிரமப்பட்டு வந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் ஐந்து இடங்களில் செயல்படும் உழவர் சந்தையில் காய்கறிகள் வாங்க குவிந்தனர். தர்மபுரி நான்கு ரோடு பகுதியில் செயல்படும் உழவர் சந்தையில் நேற்று சுமார் 8, 000 மேற்பட்ட நுகர்வோர்கள் வந்து சென்றதாகவும் வழக்கமாக 30 டன் காய்கறிகள் விற்பனையாகும் சூழலில் நேற்று ஒரே நாளில் சுமார் 61 டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனையானதாகவும் இதன் மதிப்பு சுமார் 20, 73, 913 ரூபாய் என உழவர் சந்தை வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி