வெல்லம், விலை சரிவு உற்பத்தியாளர்கள் & தொழிலாளர்கள் வேதனை

53பார்த்தது
தருமபுரி மாவட்டத்தில் பழைய தருமபுரி, முத்துக்கவுண்டன் கொட்டாய், கடகத்தூர், சோகத்தூர், பாப்பாரப்பட்டி, பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி உள்ளிட்ட பகுதியில் கரும்பில் இருந்து உருண்டை வெல்லம் உற்பத்தி செய்வது பிரதான தொழிலாக இருக்கிறது இந்தப் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட உருண்டை வெல்லம் உற்பத்தி ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. ஒரு ஆலையில் சுமார் 5 முதல் 10 பேர் வரை பணிபுரிந்து வருகின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் வெல்லம் சென்னை, ஓசூர், சேலம், கர்நாடகா, ஆந்திராவிற்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது.

மேலும் அடுத்த வாரம் ஆயுத பூஜையும், அக்டோபர் 31-ம் தேதி தீபாவளி பண்டிகை வரவுள்ள நிலையில் முன் பதிவுகள் இந்த ஆண்டு குறைவாகவே இருந்து வருகிறது. தற்போது உருண்டை வெல்லம் கிலோ ரூ. 45 முதல் 50 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆனால் விலை 70 ரூபாய் வரை விற்பனையானால் மட்டுமே உற்பத்தியாளர்களுக்கு நல்ல வருவாய் கிடைக்கும் குறைந்த அளவு 60 ரூபாய் விற்பனையானால் தான் இழப்பு இல்லாமல் இருக்கும். போதிய அளவு முன்பதிவு கிடைக்காமல் உள்ளது. இதனால் இந்த ஆண்டு பண்டிகைக்கு உருண்டை வெல்லத்தின் விலையும் இல்லை, போதிய வருவாய் கிடைக்கவில்லை எனவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி