அரூர் - Harur

அரூர்: மேல் செங்கப்பாடி தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு

தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேல் செங்கப்பாடி கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றுப்பகுதியில் இன்று (அக்டோபர் 18) வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் வறட்சியாக காணப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாக பருவ மழை தீவிரமடைந்ததையடுத்து தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கிருஷ்ணகிரி கே ஆர் பி அணை பகுதிகளில் வேகமாக தண்ணீர் நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டு உள்ளதை அடுத்து தென்பெண்ணை ஆற்றுப்பகுதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு வருவாய் துறையினர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் எச்சரிக்கை விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.

வீடியோஸ்


தர்மபுரி
கண்ணியம் குறித்து பாடமெடுக்க தேவையில்லை!
Oct 18, 2024, 16:10 IST/

கண்ணியம் குறித்து பாடமெடுக்க தேவையில்லை!

Oct 18, 2024, 16:10 IST
யாரும் புண்பட்டுவிடக்கூடாது என்பது திராவிடம். மற்றோரைப் புண்படுத்தி மகிழ்வது ஆரியம். இதற்கு மேலும் ஓர் உதாரணமே தமிழ்தாய் வாழ்த்தில் திராவிடம் தவிர்க்கப்பட்டது. சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நிற்காது. வரிகளை நீக்கினால் ‘திராவிடம்’ வீழாது. இதைப் புரிந்து கொள்ளாத ஆரியநர், அண்ணா வழியில் நடைபோடும் நம் தலைவர் அவர்களுக்கு, ‘கண்ணியம்’ குறித்துப் பாடமெடுக்கத் தேவையில்லை. ஒருமைப்பாட்டுக்கு உலைவைக்க நினைக்கும் அவரை, ஒன்றிய அரசு உடனேத் திரும்பப்பெற வேண்டும் என துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.