அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை ஒட்டி தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தர்மபுரி ஒன்றியம் எட்டமரத்துப்பட்டி கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் கிழக்கு மாவட்ட செயலாளர் அரசாங்கம் தலைமையில் நடந்தது. சேலம் நரம்பியல் நிபுணர் டாக்டர் சுந்தர்ராஜன் தலைமையிலான மருத்துவ குழுவினர், இந்த முகாமில் ரத்த கொதிப்பு ரத்த சர்க்கரை, இருதயம், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்த்து மருந்து மாத்திரைகளை வழங்கினார். எட்டமரத்துப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 200 க்கும் மேற்பட்ட ஏழை எளியோர், இம்முகாமில் பங்கேற்று பயனடைந்தனர்.