அரூர்: விதிகளை மிறிய வாகனங்களுக்கு ரூ. 1,79,05,005 அபராதம்

54பார்த்தது
தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 2024 முதல் செப்டம்பர் 2024 வரை 6 மாதங்களில் போக்குவரத்து துறையின் சார்பாக வட்டார போக்குவரத்து அலுவலர் த. தாமோதரன் தலைமையில், தருமபுரி பறக்கும் படை மோட்டார் வாகன ஆய்வாளர் பாலசுப்பரமணியன், தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலவக மோட்டார் வாகன ஆய்வாளர் அ. க. தரணீதர், பாலக்கோடு பகுதி அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் கு. வெங்கிடுசாமி, அரூர் பகுதி அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் குலோத்துங்கன் ஆகியோர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

அதில், 9281 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டு, 3389 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கைகள் வழங்கப்பட்டன. குறிப்பாக காலாண்டு வரிசெலுத்தாமல் இயக்குதல், தகுதிச்சான்று, காப்புச்சான்று/புகைச்சான்று புதுப்பிக்காமல் இயக்குதல், அனுமதி சீட்டு இல்லாமல் இயக்குதல் போன்ற குற்றங்களுக்காக 400 வாகனங்கள் சிறை பிடிக்கப்பட்டன. ஏப்ரல் 2024 முதல் செப்டம்பர் 2024 மாதம் வரை 6 மாதங்களில் தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலக செயலாக்க பணிகள் மூலம் அரசுக்கு மொத்தம் ரூ. 1,79,05,005 வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் த. தாமோதரன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி