அரூர்: புதிய வழித்தடங்களில் பேருந்து சேவை அமைச்சர் துவக்கம்

74பார்த்தது
தர்மபுரி பேருந்து நிலையத்தில் நேற்று அக்டோபர் 04 மாலை 5 பேருந்துகள் புதிய வழித்தடம் பேருந்துகளை வேளாண் மற்றும் உழவர் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் கொடி அசைத்து தொடக்கி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி தர்மபுரி எம்பி ஆ. மணி, திமுக மாவட்ட கழக செயலாளர் தடங்கம் சுப்பிரமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பொது மக்களுக்கு பேருந்து சேவை அளிப்பதற்காக தர்மபுரி - லளிகம் செல்லும் பேருந்தை பூதனஅள்ளி ஊருக்குள் சென்று வருமாறும், தர்மபுரி - மிட்டாரெட்டிஅள்ளி வரை செல்லும் பஸ்சை கோம்பேரி மாரியம்மன் கோயில் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி -வத்தல்மலை வரை செல்லும் பேருந்தை கூடுதல் நடைகள் இயக்கியும், தர்மபுரி -நடுப்பட்டி செல்லும் பேருந்தை ஜடையம்பட்டி ஊருக்குள் சென்று வருமாறும், அரூர் - சிலம்பை மற்றும் கோம்பை, அரூர் செல்லும் பேருந்தை கோபால்பட்டி, பாப்பனாவலசை, கூடலூர், தீர்த்த மலை வழியாக வழித்தடம் மாற்றியும் என 5 மகளிர் விடியல் பயணம் செய்யும் பேருந்து வழித்தடங்கள் நீட்டிப்பு, மாறுதல் செய்து இயக்கப்பட உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி