அரூர்: ஆட்சியரிடம் மனு அளித்த கொங்கு மக்கள் முன்னணியினர்

50பார்த்தது
கே. ஈச்சம்பாடி அணைக்கட்டில் இருந்து கடத்துார், மொரப்பூர் ஏரிகளுக்கு நீரேற்று குழாய் மூலம் நீர் நிரப்பும் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற கோரி, கொங்கு மக்கள் முன்னனி தர்மபுரி மாவட்ட செயலாளர் அஜித் தலைமையில், நிர்வாகிகள், தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு கொடுத்தனர். அவர்கள் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது மாவட்டத்தில் உள்ள மொரப்பூர், கடத்துார் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் கடும் வறட்சியின் காரணமாக நிலத்தடி நீர் மட்டம், 1200 அடிக்கும் கீழ் சென்றுள்ளது. இதனால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் விவசாய தொழிலை கைவிட்டு வேலை தேடி சென்று வருகின்றனர். இதை தடுக்க தென்பெண்ணை ஆற்றில் இருந்து தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க, கே. ஈச்சம்பாடி அணைக்கட்டில் இருந்து கடத்துார், மொரப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு நீரேற்று குழாய் மூலம் நீர் கொண்டு வர கடந்த அதிமுக ஆட்சியில் 300 கோடி ரூபாய் மதிப்பில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. ஆனால் தற்போதையை அரசு இந்த திட்டத்தை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வருகிறது. இந்த பகுதி விவசாயிகளின் நலன் கருதி இந்த திட்டத்தை திமுக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி