அரூர் - Harur

அரூர்: கம்பைநல்லூரில் 22 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

கம்பைநல்லூரில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற ஆட்டுச் சந்தை நடைபெற்று வருகிறது. நேற்று நவம்பர் 08 நடைபெற்ற சந்தையில் ஆடுகளை வாங்க ஊத்தங்கரை, தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களான திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர். நேற்றைய சந்தையில் 200க்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகள் கொண்டு வந்தனர். ஆடுகள் 5,000 முதல் 9,700 வரை 22 லட்சத்திற்கு விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

வீடியோஸ்


தர்மபுரி
Nov 09, 2024, 03:11 IST/தர்மபுரி
தர்மபுரி

தர்மபுரி: சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

Nov 09, 2024, 03:11 IST
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் 60-வது ஆண்டு கந்த சஷ்டி லட்சார்ச்சனை திருவிழா கடந்த 2-ம் தேதி தொடங்கியது. மேலும் சூரசம்ஹார விழாவை அடுத்து கோவிலில் சாமிக்கு பன்னீர் அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நேற்று இரவு பூர்த்தி ஹோமமும், இடும்பன் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகளும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நேற்று இரவு கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு பல்வேறு வகையான சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. தொடர்ந்து சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் சாமிக்கு உபகார பூஜைகளும், திருக்கல்யாணமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவையொட்டி பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க பொன்மயில் வாகனத்தில் சாமி திருவீதி உலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினர், அறங்காவலர் குழுவினர் மற்றும் செங்குந்தர் சமூகத்தினர் செய்து இருந்தனர்.