அரூர்: லட்சுமி நாராயணா  கோயிலில் சிறப்பு வழிபாடு

64பார்த்தது
தர்மபுரி அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் பகுதியில் அமைந்துள்ள லட்சுமி நாராயணா திருக்கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு லட்சுமி நாராயணா சாமிக்கு 12 வகையான பொருட்களைக் கொண்டு பால், தயிர், இளநீர், பன்னீர், விபூதி தேன் பஞ்சாமிர்தம் போன்ற பொருட்களைக் கொண்டு அபிஷேகங்கள் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது அதைத் தொடர்ந்து லட்சுமி நாராயணா சிறப்பு தீபாரணைகள் நடைபெற்றது பின் கொடி மரத்தில் தீபங்களை ஏற்றி பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

அதைத்தொடர்ந்து பெருமாள் சுவாமி அலங்கரித்து வாகனத்தில் வைத்து சாமி கோயிலை சுற்றி மூன்று முறை சுற்றி வந்தது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் ராஜசிவலிங்கம் அர்ச்சகர் ரகு. ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர் கோயில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி