
அரூர்: அனுமதியின்றி லாரியில் மண் கடத்திய ஓட்டுநர் கைது
தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரூர் பகுதியில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் இளைய செல்வி தலைமையில் அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை நிறுத்தி நேற்று மாலை சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த லாரியில் 4 யூனிட் நுரம்பு மண்ணை அரசின் அனுமதி இன்றி கடத்திச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து அந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக அலுவலர்கள் அரூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் காவலர்கள் இன்று வழக்குப்பதிவு செய்து பட்டவர்த்தியைச் சேர்ந்த லாரி டிரைவர் பிரகாஷ் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.