அம்பேத்கர் சிலைக்கு விசிக சார்பில் மரியாதை
தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட M. பள்ளிப்பட்டி பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் திரு. கோவேந்தன் அவர்கள் தலைமையில் இன்று பேருந்து நிலையத்தில் உள்ள சட்ட மேதை அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் , பொறுப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஊர்மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.