அரூர் - Harur

அரூர்: மக்கள் பயன்பாட்டுக்கு வந்த புதிய பேருந்து நிலையம்

தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதி உட்பட்ட அரூர் பேரூராட்சி கீழ் இயங்கும் பேருந்து நிலையம் பேருந்துகள் உள்ளே வந்து செல்ல போது இட வசதி இல்லாததால் சிரமத்துடன் இயக்கப்பட்டு வந்ததை அடுத்து கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு அரூர் பழைய பேருந்து நிலையம் முழுவதுமாக இடிக்கப்பட்டு புதியதாக கான்கிரீட் சாலைகள் அமைக்கப்பட்டு பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டு கடந்த அக்டோபர் 24ஆம் தேதி அமைச்சர்கள் கே. என். நேரு, எம். ஆர். கே. பன்னீர்செல்வம் ஆகியோர் அரூர் பேருந்து நிலையத்தை திறந்து வைத்தனர். ஆனால் நிர்வாக காரணங்களுக்காக பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வரவில்லை. இந்தநிலையில், இன்று முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு பேருந்து நிலையம் கொண்டு வரப்பட்டு பேருந்துகள் இயங்க தொடங்கி உள்ளன. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வீடியோஸ்


தர்மபுரி
Nov 12, 2024, 03:11 IST/தர்மபுரி
தர்மபுரி

தர்மபுரி: புதிய அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்த எம்எல்ஏ

Nov 12, 2024, 03:11 IST
தருமபுரி மாவட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதி, நல்லம்பள்ளி வட்டம் மானியாதஅள்ளி ஊராட்சி மேல்பூரிக்கல் கிராமத்தில் MGNREGS 2022 - 2023 திட்டத்தில் ரூபாய் 11. 97 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையம் திறப்பு விழா நேற்று நவம்பர் 11 நடைபெற்றது. இதில் தர்மபுரி சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் எஸ்பி. வெங்கடேஸ்வரன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி அங்கன்வாடி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பாமக நிர்வாகிகள், அங்கன்வாடி பணியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள், ஊட்டச்சத்து அலுவலர் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.