தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 234 தொகுதிகளுக்கும் நேரடியாக சென்று ஆய்வு நடத்தி வருகின்றார். இந்த நிலையில் திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, மாவட்டங்களில் ஆய்வை முடித்து விட்டு, தருமபுரி மாவட்டம் அரூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நேற்று மாலை 3 மணிக்கு திடீரென நுழைந்து ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் 223 தொகுதியாக திடீர் ஆய்வு செய்த அமைச்சர், 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களை சந்தித்து நல்ல படித்து அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும், ஆசிரியர் அறிவுரை பின்பற்ற வேண்டும், பெற்றோர்களின் நிலையை அறிந்து மாணவர்கள் கல்வி கற்க வேண்டும், படிப்பை தாண்டி வெளியுலக திறன்களை வளர்க்க வேண்டும், 12 ஆம் வகுப்பில் அனைவரும் தேர்ச்சி பெற்று உயர்கல்வி பயில வேண்டும் என மாணவிகளுக்கு அறிவுறுத்தினார்.
இதனை தொடர்ந்து பள்ளி கட்டிடங்களையும் பார்வையிட்டார். அப்போது தலைமை ஆசிரியரிடம் பள்ளியின் தேவையை கேட்டறிந்தார். பழைய ஆய்வகம் பழுதானதால், பத்தாம் வகுப்பு மாணவர்கள் ஆய்வகத்தை பயன்படுத்தி வருவதால், மேல்நிலை வகுப்பிற்கு ஆய்வகம் இல்லை என அமைச்சரிடம் கூறியுள்ளார். அதற்கு உடனடியாக ஆய்வகம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.