
கடலூர்: மோட்டார் சரி செய்து குடிநீர் விநியோகம்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டமன்ற தொகுதி அண்ணாகிராமம் ஒன்றியம் கீழ் கவரப்பட்டு ஊராட்சி அண்ணாகிராமம் பகுதியில் கடந்த 3 நாட்களாக, அந்தப் பகுதியில் மக்களுக்கு குடிநீர் வழங்கக்கூடிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மோட்டார் பம்பு பழுது ஏற்பட்டதால் மக்கள் அவதி அடைந்தனர். இந்த நிலையில் உடனடியாக சரி செய்து பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் வழங்கப்பட்டது.