நெல்லிக்குப்பம்: உடல் நலம் சார்ந்த விழிப்புணர்வு

56பார்த்தது
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் ஆர். சி. நடுநிலைப்பள்ளி கீழ் பாதியில் அண்ணாகிராம ஒன்றியம் RBSK மருத்துவ குழுவினர் ஒறையூர் PHC இல் இருந்து வருகை புரிந்து வளரிளம் பருவத்திற்கான விழிப்புணர்வு நிகழ்வை நடத்தினர். இந்நிகழ்வை பள்ளி தலைமையாசிரியர் A. தேவசகாயம் தலைமை தாங்கினார். டாக்டர் A. N. ராஜ், இராம மூர்த்தி இருவரும் வளரிளம் பருவத்திற்கான உடல் நலம் சார்ந்த விழிப்புணர்வு கருத்துகளை சிறப்பாக வழங்கினர். மேலும் தமிழ் மணி, அருள் விழி மற்றும் பள்ளி ஆசிரியர் ஆசிரியைகள், ஒத்த வயதுடைய Health messenger மாணவர் மாணவிகள் மற்றும் அனைத்து மாணவர் மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். அறிவியல் ஆசிரியை கமலி இந்திரா நன்றியுரை கூறினார்.

தொடர்புடைய செய்தி