கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த முத்தரசன்குப்பம் கிராமத்தில் மாசி மாத திருவிழாவை முன்னிட்டு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கரகம் எடுத்து வருதல் நிகழ்ச்சி பம்பை உடுக்கையுடன் வெகு விமரிசையாக நடைபெற்றது. பின்னர் கோவிலில் சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.