கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த திருவதிகை கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சரநாராயண பெருமாள் கோவிலில் திருவாய் மொழித்திருநாள் கடைசி இராபத்து 10ஆம் நாளான நேற்று (ஜனவரி 19) உற்சவ சரநாராயண பெருமாள் தேவி பூதேவியுடன் சமேதராக விசேஷ அலங்காரத்தில் உள்புறப்பாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.