பண்ருட்டி - Panruti

நெல்லிக்குப்பம்: தினசரி மார்க்கெட்டில் திறப்பு

நெல்லிக்குப்பம்: தினசரி மார்க்கெட்டில் திறப்பு

நெல்லிக்குப்பம் ஆலை ரோட்டில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான சுமார் 18 கடைகள் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் பல லட்சம் ரூபாய் செலவில் டெண்டர் விடப்பட்டு இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மேற்படி கடைகளில் வியாபாரம் செய்துவரும் கடை உரிமையாளர்கள் கடையை காலி செய்து விட்டால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என நகரமன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் அவர்களிடம் கோரிக்கை வைத்தனர்.  வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று மாற்று ஏற்பாடாக நெல்லிக்குப்பம் கான்சாகிப் அப்துல் ரசாக் தினசரி மார்க்கெட்டில் சுமார் 12 கடைகளை 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டு நெல்லிக்குப்பம் வர்த்தகர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் கிருஷ்ணராஜன் தலைமை தாங்கினார். திமுக நகர செயலாளரும், நெல்லிக்குப்பம் வர்த்தகர்கள் முன்னேற்றச் சங்கத்தின் செயலாளருமான ப. மணிவண்ணன் முன்னிலை வகித்தார்.  நகராட்சி வருவாய் ஆய்வாளர் ஜான் பால் வரவேற்புரை ஆற்றினார். திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் மற்றும் நகரமன்ற துணை தலைவர் கிரிஜா ஆகியோர் ரிப்பன் வெட்டி கடைகளை திறந்து வைத்து ஒவ்வொரு கடை உரிமையாளர்களுக்கும் சாவியை ஒப்படைத்தனர்.

வீடியோஸ்


హైదరాబాద్