தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட உத்தரவு

61பார்த்தது
தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட உத்தரவு
தமிழ்நாட்டிற்கு 7.5 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 38-வது கூட்டத்தில், மார்ச் முதல் மே மாதம் வரை தமிழ்நாட்டிற்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி 7.5 டிஎம்சி தண்ணீரை திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டது. மார்ச், ஏப்ரல் மற்றும் மே ஆகிய 3 மாதங்களுக்கும் ஒவ்வொரு மாதமும் 2.5 டிஎம்சி தண்ணீர் கர்நாடகா திறந்து விட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி