''கங்குவா" படம் குறித்து மீண்டும் பேசிய ஜோதிகா

59பார்த்தது
''கங்குவா" படம் குறித்து மீண்டும் பேசிய ஜோதிகா
சூர்யா நடிப்பில் வெளியான "கங்குவா" படம் குறித்து மீண்டும் பேசியுள்ள நடிகை ஜோதிகா, 'வெற்றி பெற்ற பல தரமில்லாத படங்களை பார்த்துள்ளேன். ஆனால், என் கணவரின் படம் கடுமையாக விமர்சிக்கப்பட்டதாக உணர்கிறேன் என கூறியுள்ளார். மேலும், அப்படத்தில் சில பகுதிகள் நன்றாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், அனைவரும் கடுமையாக உழைத்தனர். அப்படத்திற்கு வந்த விமர்சனங்கள் என்னைப் பாதித்தது. மீடியாக்கள் பாரபட்சமாக நடந்துகொண்டது வருத்தமாக இருந்தது' என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி