சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு கடலூர் மாவட்டம் பண்ருட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பண்ருட்டி துணை காவல் கண்காணிப்பாளர் ராஜா விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார். காந்தி சாலை, நான்குமுனை சந்திப்பு, ராஜாஜி சாலையில் சாலை பாதுகாப்பு பதாகைகளை மாணவர்கள் ஏந்தி விழிப்புணர்வு மேற்கொண்டனர்.