எலான் மஸ்க்குக்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் ஏர்டெல் நிறுவனம் ஒப்பந்தம்செய்துள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் செய்த ஒப்பந்தத்தின் மூலம் ஸ்டார்லிங்க் வழங்கும் இன்டர்நெட் வசதியை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் மூலம் செயற்கைக்கோள் வழியான அதிவேக இன்டர்நெட் சேவையை ஏர்டெல் வழங்கும். ஸ்பேஸ் எக்ஸ் உடன் ஏர்டெல் ஒப்பந்தம் செய்துகொண்ட போதிலும் ஸ்டார்லிங்க் சேவையை வழங்க இந்திய அரசின் ஒப்புதல் அவசியம் ஆகும்.