நெல்லிக்குப்பம்: ரயில்வே கேட் மீது டிராக்டர் மோதல்

85பார்த்தது
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த நெல்லிக்குப்பத்தில் ஆலை ரோடு பகுதியில் ரெயில்வே கேட் நேற்று மாலை அந்த வழியாக சென்னை நோக்கி சென்ற ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்காக கேட் மூடப்பட்டது. அப்போது அந்த வழியாக கரும்பு லோடு ஏற்றிக் கொண்டு வந்த டிராக்டர் ஒன்று எதிர்பாராதவிதமாக ரெயில்வே கேட் மீது மோதியது. இதில் கேட் முறிந்து சேதமடைந்தது. இதனால் அந்த வழியாக வந்த ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு சிக்னல் கிடைக்காமல் நடுவழி யில் நிறுத்தப்பட்டது. உடனடியாக ரெயில்வே ஊழியர்கள் மாற்று நடவடிக்கை எடுத்த பின் ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதை தொடர்ந்து வந்த 4 ரெயில்கள் அந்த பகுதியில் நின்று சிறிது நேரம் தாமத மாக புறப்பட்டு சென்றது. மேலும் சேதமான ரெயில்வே கேட்டை சரிசெய்யும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி